வியாழன், 29 செப்டம்பர், 2016

வெண்பா - 28

வெண்பா - 28

பொய்யை    தவிர்த்தலாகா   தென்றெண்ணி   அஃதை 
துறவிலே     வைத்தான்     அவன்.


பேச்சினால் வரும் குற்றங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை மொத்தம் நான்கு குற்றங்கள் என்று தொகுத்தார் வள்ளுவர். அவையாவன
1. பொய் பேசுதல்,
2. புறம் பேசுதல் (அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். இது கோள் சொல்லுதல், குண்டுணி பேசுதல் என்று இருவகைப்படுமாம், குறளை என்றும் இதனைச் சொல்வர்),
3. தீயசொற்களைப் பேசுதல்
4. தேவையற்றதைப் பேசுதல் என்று வகுத்தும் தொகுத்தும் அவற்றை வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களால் விளக்குகிறார்.
இதில் பொய் என்பது இல்லறத்தார்க்குத் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால், வாய்மை என்பதை மட்டும் துறவறவியலில் வைக்கிறார். மற்ற மூன்றையும் இல்லறவியலில் வைக்கிறார்.


பொய்.யை      தவிர்த்.தலா.கா           தென்.றெண்.ணி        அஃ.தை 
நேர்.நேர்        நிரை.நிரை.நேர்          நேர்.நேர்.நேர்           நேர்.நேர் 
தே.மா             கரு.விளங்.காய்           தே.மாங்.காய்            தே.மா 
மா முன் நிரை வரின்    காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்       மா முன் நிரை வரின்  
இயற்சீர் வெண்டளை   வெண்சீர் வெண்டளை        வெ. வெண்டளை      இ. வெண்டளை


துற.விலே           வைத்.தான்        அவன்
நிரை.நிரை        நேர்.நேர்             நிரை 
கரு.விளம்           தே.மா                 மலர் 
விளம் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்  
இ. வெண்டளை            இ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  ஈற்றுச்சீர் மலர்.

- 29-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக