வெள்ளி, 23 செப்டம்பர், 2016

வெண்பா - 22

வெண்பா - 22

எளியதாம்  மூவேழு  நாட்கள்  தொடர

கடும்முயற்சி  தேவை  பிறகு

[வெண்பா-21-ல் சொன்ன மாதிரி 21 நாட்கள் தொடர்ந்தால் மட்டும் போதாது. உண்மையான சவாலே அதன் பின்னர் தான் இருக்கிறது. முதல் 21 நாட்கள் தேனிலவு காலம் போல அதீத ஆர்வத்தால் எளிதில் கைவந்துவிடும் எவ்வித பழக்கமும், பின்னர் தான் அதை தக்கவைத்துக்கொள்ள/பின்பற்ற பெருமுயற்சி தேவைப்படும்]


எளி.யதாம்         மூ.வே.ழு                           நாட்.கள்              தொட.ர
நிரை.நிரை        நேர்.நேர்.நேர்                  நேர்.நேர்              நிரை.நேர்
கரு.விளம்           தே.மாங்.காய்                  தே.மா                   புளி.மா
  விளம் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்   மா முன் நிரை வரின்
  இயற்சீர் வெண்டளை     வெண்சீர் வெண்டளை     இ. வெண்டளை        இ. வெண்டளை


கடும்.முயற்.சி           தே.வை               பிற.கு
நிரை.நிரை.நேர்         நேர்.நேர்            நிறைபு
கரு.விளங்.காய்           தே.மா                பிறப்பு
     காய் முன் நேர் வரின்     மா முன் நிரை வரின்
     வெ. வெண்டளை            இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  ஈற்றுச்சீர் பிறப்பு.


- 23-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக