ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

வெண்பா - 13

வெண்பா - 13

நிலத்திற்கு உண்டிங்கே  எல்லை நதிநீருக்
கெல்லை வகுத்தவர் யார்?

நிலத்.திற்.கு                 உண்.டிங்.கே            எல்.லை            நதி.நீ.ருக்
நிரை.நேர்.நேர்           நேர்.நேர்.நேர்          நேர்.நேர்          நிரை.நேர்.நேர் 
புளி.மாங்.காய்             தே.மாங்.காய்          தே.மா              புளி.மாங்.காய் 
  காய் முன் நேர் வரின்      காய் முன் நேர் வரின்   மா முன் நிரை  வரின்    காய் முன் நேர் வரின் 
  வெண்சீர் வெண்டளை    வெ. வெண்டளை        இயற்சீர் வெண்டளை    வெ. வெண்டளை

கெல்.லை           வகுத்.தவர்            யார்?
நேர்.நேர்             நிரை.நிரை          நேர் 
தே.மா                 கரு.விளம்             நாள் 
  மா முன் நிரை வரின்      விளம் முன் நேர் வரின் 
  இ. வெண்டளை             இ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர்  நாள்.

[சில நாட்கள் ஊரில் இல்லாததால் தாமதம், விடுபட்ட நாட்களுக்கு சேர்த்து இன்று பதிவிடுகிறேன்].
- 14-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக