ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

வெண்பா - 3

வெண்பா - 3

நேர விரையமென நீநினைத் தாலதை
தூர நிறுத்தியே  வை


அசைப்பிரித்தல்:

நே     ர          விரை யமெ   ன
நேர் நேர்      நிரை   நிரை  நேர்
தே.மா           கரு.விளங்.காய்
        மா முன் நிரை வரின்
        இயற்சீர் வெண்டளை

விரை   யமெ  ன          நீ      நினைத்
நிரை   நிரை  நேர்      நேர்   நிரை
கரு.விளங்.காய்           கூ.விளம்
                  காய் முன் நேர் வரின்
                  வெண்சீர் வெண்டளை


நீ        நினைத்      தா     லதை
நேர்   நிரை           நேர்   நிரை
கூ.விளம்                கூ.விளம்
          விளம் முன் நேர் வரின்
           இயற்சீர் வெண்டளை

தா     லதை       தூ     ர
நேர்   நிரை        நேர்  நேர்
கூ.விளம்             தே.மா
          விளம் முன் நேர் வரின்
          இயற்சீர் வெண்டளை


தூ     ர          நிறுத்   தியே 
நேர்  நேர்     நிரை  நிரை
தே.மா           கரு.விளம்
       மா முன் நிரை வரின்
       இயற்சீர் வெண்டளை

நிறுத்   தியே       வை
நிரை  நிரை       நேர்
கரு.விளம்          நாள்
         விளம் முன் நேர் வரின்
          இயற்சீர் வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை (நேர, தூர)
5. ஈற்றுச்சீர் நாள்.

- 04-09-2016.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக