புதன், 21 செப்டம்பர், 2016

வெண்பா - 18

வெண்பா - 18

ஊறின   ஊறுகின்ற   ஊறும்   இனியுமது
ஊறுகாய்   காயத்துக்(கு)   ஊறு

ஊ.றின              ஊ.றுகின்.ற                      ஊ.றும்                  இனி.யும.து
நேர்.நிரை         நேர்.நிரை.நேர்                நேர்.நேர்              நிரை.நிரை.நேர்
கூ.விளம்            கூ.விளங்.காய்                 தே.மா                  கரு.விளங்.காய்
விளம் முன் நேர் வரின்   காய் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்    காய் முன் நேர் வரின்
இயற்சீர் வெண்டளை     வெண்சீர் வெண்டளை   இ. வெண்டளை       வெ. வெண்டளை

ஊ.றுகாய்            கா.யத்.துக்(கு)           ஊறு
நேர்.நிரை           நேர்.நேர்.நேர்            நேர்பு
கூ.விளம்             தே.மாங்.காய்              காசு
  விளம் முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்
  இ. வெண்டளை               வெ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  அடி மோனை  (றின/றுகாய்), பொழிப்பு மோனை (றின/ றும்)
4.  ஈற்றுச்சீர் காசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக