திங்கள், 26 செப்டம்பர், 2016

வெண்பா - 25

வெண்பா - 25

நினைவெல்லாம்          ஒன்றிலே     ஒன்றி      உழைத்தால் 
நினைத்ததெல்லாம்     கைவரும்     பார்.


நினை.வெல்.லாம்      ஒன்.றிலே               ஒன்.றி                        உழைத்.தால் 
நிரை.நேர்.நேர்          நேர்.நிரை               நேர்.நேர்                   நிரை.நேர் 
புளி.மாங்.காய்            கூ.விளம்                 தே.மா                        புளி.மா 
காய் முன் நேர் வரின்    விளம் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்  மா முன் நிரை வரின்
வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை   இ. வெண்டளை          இ. வெண்டளை


நினைத்.ததெல்.லாம்    கை.வரும்       பார் 
நிரை.நிரை.நேர்            நேர்.நிரை      நேர்
கரு.விளங்.காய்              கூ.விளம்        நாள் 
    காய் முன் நேர் வரின்   விளம் முன் நேர் வரின்
     வெ. வெண்டளை         இ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை / அடி எதுகை  (நினைவெல்லாம் / நினைத்ததெல்லாம்)
5.  ஈற்றுச்சீர் நாள்.

- 26-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக