வெண்பா - 1
சிறு திருத்தம்:
பரமபதம் வாழ்வதனை நாளும் கடக்க
பரம்பொருளை பற்றிடு நீ
முன்னம் எழுதிய குரல் வெண்பாவில் ஓரிடத்தில் தளை தட்டுகிறது
செய்யுளின் முதல் சீருக்கும் ஈற்றுச் சீருக்கும் தளை இல்லை. ஏனென்றால், முதல் சீரை வருஞ்சீராக வைக்க நிலைச்சீர் ஏதுமில்லை அதுபோலவே ஈற்றுச் சீரை நிலைச் சீராக வைக்க வருஞ்சீர் ஏதுமில்லை. இதை நான் தப்பாக அர்த்தம் செய்துக்கொண்டு, முதல் அடியின் கடைசிச் சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் தளை இல்லை என நினைத்துக் கொண்டேன்.
நேற்று மறுபடியும் கி.வா.ஜ அவர்களின் "கவிபாடலாம்" நூலைப் படிக்கும் போது தான் புரிந்தது. அதனால் இந்த திருத்தம். ஏற்கனவே தவறாக எழுதிய வெண்பாவில் என்ன தவறென்று புரிந்து கொள்ள, அதில் திருத்தம் ஏதும் செய்யாமல் அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.
கடக் க பரம் பொரு ளை
நிரை நேர் நிரை நிரை நேர்
மா முன் நிரை வரின்
இயற்சீர் வெண்டளை
~ * ~ * ~ * ~ * ~ * ~ * ~
பரமபதம் வாழ்வதனை நாளும் கடந்திட
பரம்பொருளை பற்றிடு நீ
அசை பிரித்திடல்:
பர மப தம் வாழ் வத னை நா ளும் கடந் திட
நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நிரை நிரை
கரு.விளங்.காய் கூ.விளங்.காய் தே.மா கரு.விளம்
காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளை
பரம் பொரு ளை பற் றிடு நீ
நிரை நிரை நேர் நேர் நிரை நேர்
கரு.விளங்.காய் கூ.விளம் நாள்
காய் முன் நேர் வரின் விளம் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை, அடி எதுகை.
5. ஈற்றுச்சீர் நாள்.

- 02-09-2016.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக