புதன், 28 செப்டம்பர், 2016

வெண்பா - 27

வெண்பா - 27

எவ்வினைக்கும் இங்கே எதிர்வினை உண்டென்பர் 
இவ்வுலகில் சிந்தித்து செய் 


எவ்.வினைக்.கும்           இங்.கே              எதிர்.வினை            உண்.டென்.பர் 
நேர்.நிரை.நேர்              நேர்.நேர்            நிரை.நிரை             நேர்.நேர்.நேர் 
கூ.விளங்.காய்                தே.மா                 கரு.விளம்             தே.மாங்.காய் 
காய் முன் நேர் வரின்      மா முன் நேர் வரின்   விளம் முன் நேர் வரின்  காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை    இயற்சீர் வெண்டளை    இ. வெண்டளை      வெ. வெண்டளை

இவ்.வுல.கில்             சிந்.தித்.து               செய் 
நேர்.நிரை.நேர்         நேர்.நேர்.நேர்         நேர்
கூ.விளங்.காய்            தே.மாங்.காய்            நாள் 
காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின்
வெ. வெண்டளை           வெ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை/அடி எதுகை  (எவ்வினை/இவ்வுலகில்).
5.  ஈற்றுச்சீர் நாள்.

- 28-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக