வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வெண்பா - 8

வெண்பா - 8

களித்திடுவோம் நாற்பட்ட சோர்வை விரட்ட
வெளியூர்க்கு யாத்திரை சென்று.


களித்.திடு.வோம்             நாற்.பட்.ட                    சோர்.வை                   விரட்.ட
நிரை.நிரை.நேர்             நேர்.நேர்.நேர்               நேர்.நேர்                    நிரை.நேர்
கரு.விளங்.காய்               தே.மாங்.காய்                தே.மா                        புளி.மா
     காய் முன் நேர் வரின்            காய் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்      மா முன் நிரை வரின்
     வெண்சீர் வெண்டளை          வெ. வெண்டளை          இயற்சீர் வெண்டளை    இ. வெண்டளை


வெளி.யூர்க்.கு                 யாத்.திரை                      சென்.று
நிரை.நேர்.நேர்               நேர்.நிரை                      நேர்பு
புளி.மாங்.காய்                 கூ.விளம்                        காசு
          காய் முன் நேர் வரின்         விளம் முன் நேர் வரின்
          வெ. வெண்டளை                இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை 
(களி/வெளி)
5. ஈற்றுச்சீர் 
காசு.


- 09-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக