வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வெண்பா - 9

வெண்பா - 9

முனைப்போடு நீயும் முயன்றிடு  பின்னர்
முடியாத தேதென கூறு


முனைப்.போ.டு             நீ.யும்                    முயன்.றிடு          பின்.னர்
நிரை.நேர்.நேர்            நேர்.நேர்              நிரை.நிரை        நேர்.நேர்
புளி.மாங்.காய்              தே.மா                   கரு.விளம்            தே.மா
         காய் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்    விளம் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின் 
       வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை     இ. வெண்டளை             இ. வெண்டளை

முடி.யா.த                   தே.தென           கூறு
நிரை.நேர்.நேர்          நேர்.நிரை         நேர்பு
புளி.மாங்.காய்             கரு.விளம்         காசு
         காய் முன் நேர் வரின்     விளம் முன் நேர் வரின்
          வெ. வெண்டளை          இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி  மோனை (முனை/முடி), பொழிப்பு மோனை (முனை/முயன்)

5. ஈற்றுச்சீர்  காசு.


அடுத்து நான்கு  நாட்களுக்கு வெளியூர் பயணம் இருப்பதால், முன்னமே பதிவிடுகிறேன். கடமை! கடமை!! :)

- 10-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக