மரபுக்கவிதைகள் எழுதுவது என்பது எளிதல்ல சவாலானது.
புதுக்கவிதைகளைப் போல வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதிட முடியாது. புதுக்கவிதையில் எதுகை மோனைத் தொடையெல்லாம் எளிதில் கைவரும். விதிமுறைகள் ஏதும் கிடையாது.
மரபுக்கவிதைக்கென விதிமுறைகள் பல பின்பற்ற வேண்டும். தளை தட்டாமல் எழுத வேண்டும். அதற்குள் எதுகை மோனை உள்ளிட்ட தொடைகள் வைத்திட வேண்டும். ஒன்று கைவந்தால் மற்றொன்று உதைக்கும். எங்கே, சொல்ல வேண்டிய சேதியை இத்தனை சீர்களுக்குள் இந்த விதிகளின் படி சொல்லிவிடு பார்ப்போம் என அறைகூவல் விடுக்கும்.
மரபுக்கவிதையின் சுவையே அதன் விதிகள் தான் என்று நினைக்கிறேன்.
அதற்காக புதுக்கவிதையினை குறைத்து மதிப்படவில்லை.
ஆனால் மரபுக்கவிதையில் இலக்கண அறிவை மெருகேற்றலாம், வார்த்தைகள் பலவற்றை வசப்படுத்தலாம்.
இதற்காகவே யாப்பிலக்கணம் படிக்க ஆசைப்பட்டேன். ஏற்கனவே பல காலம் தள்ளிப்போட்ட காரியம் இது. அதற்கு இப்பொழுது தான் நேரம் ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். மாலை அலுவலகம் முடித்து வந்தப் பின், வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, இரவோடு இரவாக (கிட்டத்தட்ட அதிகாலை வரை) படித்து முடித்துவிட்டேன்.
யாப்பிலக்கணம் அடிப்படைகள் மற்றும் வெண்பா விதிமுறைகள் எல்லாம் இங்கிருக்கு - http://karpathu-tamil.blogspot.in/2016/09/blog-post_2.html
படித்தவுடன் எழுதிய முதல் வெண்பா இதோ:
http://karpathu-tamil.blogspot.in/2016/09/blog-post_17.html
தளை தட்டாமல் எழுதுவதற்குள் தலைச் சுற்றிப்போய்விட்டது :)
வார்த்தைகள் சிக்காமல் முன் வைத்த காலை பின் வைக்காமல் அதிகாலையில் கண்ணைக் கசக்கி எழுதியது, குறைகள் இருப்பினும் முதல் முயற்சி அது. பயிற்சி செய்யச் செய்யத் தானே எந்த திறமையும் மெருகேறும்.
இதை நாள்தோறும் தொடர "தினம் ஒரு வெண்பா"வாக பதிவிட போகிறேன்.
#365project என்ற யோசனை மூலம் இவ்வெண்ணத்தை வித்திட்ட நண்பர் சொக்கன் அவர்களுக்கு நன்றியுடன், இதைத் தொடரப் போகிறேன்.
தமிழ்த் தாய்க்கொரு வெண்பா:
பூமாலை சூட்டிடுவேன் நானுனக்கு நல்லவெண்
பாமாலை கட்டி நிதம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக