செவ்வாய், 11 அக்டோபர், 2016

வெண்பா - 29

வெண்பா - 29

சிதறவிட்ட வார்த்தைகளை உன்னெதிரி கூராக்கி 
உன்னையே  தாக்குவான்  பார்.



சித.றவிட்.ட              வார்த்.தைக.ளை          உன்.னெதி.ரி          கூ.ராக்.கி 
நிரை.நிரை.நேர்       நேர்.நிரை.நேர்            நேர்.நிரை.நேர்       நேர்.நேர்.நேர் 
கரு.விளம்.காய்         கூ.விளம்.காய்              கூ.விளம்.காய்         தே.மா.காய் 
காய் முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்       காய் முன் நேர் வரின்    காய் முன் நேர் வரின் 
வெண்சீர் வெண்டளை    வெ. வெண்டளை            வெ. வெண்டளை          வெ. வெண்டளை


உன்.னையே     தாக்.குவான்         பார் 
நேர்.நிரை         நேர்.நிரை            நேர் 
கூ.விளம்           கூ.விளம்               நாள் 
விளம் முன் நேர் வரின்   விளம் முன் நேர் வரின் 
இயற்சீர் வெண்டளை              இ. வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4.  ஈற்றுச்சீர் நாள்.

குறிப்பு - நீண்ட விடுமுறை என்பதால் இந்த இடைவெளி, மீண்டும் தினம் ஒரு வெண்பா தொடரும்.

- 11-10-2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக